திருப்பதியில் தொழுகை நடத்திய கார் டிரைவர்! வெளியன வீடியோ!
திருப்பதி மலையில் வேற்று மத பிரசாரம், தொழுகை, போராட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் கார் வாடகைக்கு எடுத்து திருப்பதி வந்தனர்.நேற்று காலை திருப்பதிக்கு வந்த குடும்பத்தினர் தரிசனத்திற்கு சென்றனர்.அப்போது கார் டிரைவர் பாப விநாசம் சாலையில் உள்ள மண்டபத்தில் திடீரென தொழுகை செய்தார்.
இந்த காட்சிகள் அணைத்தும் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
இது குறித்து பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்தில் புகார் செய்தனர். தேவஸ்தான அதிகாரிகள் தொழுகையில் ஈடுபட்ட டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தரிசனத்துக்கு சென்னையிலிருந்து வந்தவர்களின் கார் ஓட்டி வந்ததாக தெரிவித்தார்.திருப்பதி மலையில் தொழுகை செய்ய தடை உள்ளது தனக்கு தெரியாது. இதனால் தொழுகை நடத்தியதாக கார் டிரைவர் தெரிவித்தார்.இது குறித்து அறிந்த திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், அந்த நபரை விசாரணைக்காக அழைத்து சென்று திருமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தடையை மீறி தொழுகை செய்தது ஏன் ? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/AnbuP443072/status/1925906273578426765
Tags: இந்திய செய்திகள்