மத்திய அரசு வீடு கட்டும் திட்டம்..! ரூ 2.67 லட்சம் மானியம் பெறுவது எப்படி? pm house scheme
ரூ 2.67 லட்சம் வரை அரசு மானியம் பெற்று புது வீடு கட்ட விண்ணப்பிப்பது எப்படி?
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 30ஆம் தேதி வரை நீங்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் என்றால் என்ன?
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற வீட்டு வசதித் திட்டம் 2015ஆம் ஆண்டில் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. மலிவு விலையில் வீடுகளைக் கட்டித் தருவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்பது இந்திய அரசாங்கத்தால் பொதுமக்கள் அனைவருக்கும் தரமான வீடுகளை வழங்குவதே இந்த திட்டத்தின் மிக முக்கிய நோக்கமாகும்.
விண்ணப்பிப்பது எப்படி?
http://pmaymis.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் செல்லவும்.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் விண்ணப்பிக்க PMAY-G இணையத்தளத்திற்கு செல்லவும். அங்கு விண்ணப்பித்தில் கேட்கப்பட்டிருக்கும் உங்களை பற்றி தனிப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்யவும். தொடர்ந்து, ஒப்புதல் படிவத்தை (Consent Form) பதிவேற்றம் செய்யவும். அதன்பின்னர், Search என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
அதன் பின் உங்களது பெயரை தேர்வு செய்து, Select to Register என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். தொடர்ந்து வங்கிக் கணக்கு விவரங்களை உள்ளிடவும்.
மெயின் மெனுவின் கீழ் உள்ள 'Citizen Assessment' என்பதைக் கிளிக் செய்து விண்ணப்பதாரர் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
அதன் பின்னர் வரும் திரையில் உங்களது ஆதார் விவரங்களைப் பதிவிட வேண்டும்.
உங்களது தனிப்பட்ட விவரங்கள், வருமானம், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் தற்போதைய குடியிருப்பு முகவரியுடன் ஆன்லைன் PMAY விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.
விவரங்களைச் சரிபார்த்துச் சமர்ப்பிக்கவும்.
உங்களது விண்ணப்ப நிலவரத்தை Track your Assessment Status என்ற வசதியில் சென்று நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.
Tags: முக்கிய செய்தி