சினிமா பானியில் சேசிங் - பரனூர் சுங்கச்சாவடி அருகே கடத்திய லாரியை 13 கிலோமீட்டர் லாரியில் தொங்கியபடி சென்று பிடித்த போலீஸ் வைரல் வீடியோ
சினிமா பானியில் சேசிங் - பரனூர் சுங்கச்சாவடி அருகே கடத்திய லாரியை 13 கிலோமீட்டர் லாரியில் தொங்கியபடி சென்று பிடித்த போலீஸ் வைரல் வீடியோ
பரனூர் சுங்கச்சாவடியிலிருந்து சிங்கபெருமாள் கோயில் வரை கடத்தப்பட்ட ஒரு டிப்பர் லாரியை காவல்துறையினர் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று பிடித்தனர் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவதற்காக இன்று காலை லாரியைஒரு நபர் திருடி சென்றார்.
இதை பார்த்து லாரியை ஓட்டி வந்தவர் கூச்சலிட்ட நிலையில், அந்த பகுதியில் இருந்த போலீசார் உஷார் அடைந்து லாரியை துரத்தி பிடிக்க முயன்றனர். போக்குவரத்துக் காவலர் முருகன் லாரியில் தொங்கியபடி சென்ற நிலையில், நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றுள்ளார் திருடன். காவலரும், தொங்கியப்படியே உயிரை பணயம் வைத்து சென்று கொண்டிருந்தார்.
அந்த லாரிக்கு பின்னாலும் போலீசார் துரத்திச் சென்றனர். தொடர்ந்து மறைமலைநகர் சிக்னலுக்கு அருகே லாரியை மடக்கினர். அந்த லாரி செண்டர் மீடியனில் மோதி நின்றிருக்கிறது. பின்னால் போலீசார் விரட்டி வந்த நிலையில், சுமார் 10 கிமீ தள்ளி மறைமலை நகரில் சிக்கினார்.
சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு சென்னை நெடுஞ்சாலையில் நடந்த இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த காவலருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1924776231020667140
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ