Breaking News

பட்டாவில் புதிய பெயர் சேர்க்க மற்றும் நீக்கம் செய்ய புதிய வசதி அறிமுகம் முழு விவரம் இதோ

அட்மின் மீடியா
0

பட்டாவில் புதிய பெயர் சேர்க்க மற்றும் நீக்கம் செய்ய புதிய வசதி அறிமுகம் முழு விவரம் இதோ 

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க http://eservices.tn.gov.in என்ற இணையதளம் அல்லது இ - சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாவில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும், தற்போதைய உரிமையாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளது. 

இதற்கு தீர்வு காணும் வகையில், இறந்தவரின் பெயர்களை நீக்கவும் தற்போதைய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்கவும் இணையதளம் மூலமாகவும் அல்லது இ சேவை மையங்களில் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்பதை பொதுமக்கள் அறியும் வண்ணம் மாவட்ட அளவில் பத்திரிக்கை செய்தியாக வெளியிட வேண்டும் என்று நில நிர்வாக ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார். 

மேலும், இணையதளம் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்களை வழிகாட்டு நெறிமுறைகளின் படி பரிசீலனை செய்து ஆணை பிறப்பிக்க வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியான அறிவிப்பில்:-

தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, இணையவழியில் பொதுமக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும், https://eservices.tn.gov.in/என்ற இணையதளத்தின் வாயிலாக பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. இருப்பினும், பல சிட்டாவிலுள்ள பட்ட இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும் அவர்களின் 3/7 ந பதிலாக வாரிசுதாரர்களின் பெயர்கள் அல்லது தற்போதைய உரிமையாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளன.

எனவே, பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களின் வாயிலாகவோ அல்லது Citizen Portal வாயிலாகவோ தெரிவிக்கப்படுகின்றது. விண்ணப்பிக்கலாம் என

மேற்படி விண்ணப்பங்கள், ஆவணங்களின் அடிப்படையில் எதிர்வரும் ஜமாபந்தியில் பரிசீலனை செய்யப்பட்டு, பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடர்பாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் தெரிவிக்கப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback