29-ந்தேதி முதல் கலைஞர் மகளிர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்
29-ந்தேதி முதல் கலைஞர் மகளிர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்
கலைஞர் மகளிர் உதவித்தொகை பெறாமல் இருக்கும் விடுபட்ட பெண்கள், வரும் 29-ந்தேதி முதல் விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.
தமிழகத்தில் தற்போது 2 கோடியே 26 லட்சத்து 14 ஆயிரத்து 128 குடும்ப அட்டைகள் உள்ளன. அதில் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் தவிர 1 கோடியே 12 லட்சம் பெண்கள் உரிமைத் தொகை பெற முடியவில்லை. எனவே, தகுதியான விடுபட்ட பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி வரும் 29-ந்தேதி முதல் தகுதியான விடுபட்ட பெண்கள் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
அதன்படி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மே 29 ஆம் தேதி முதல் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட உள்ளது. இதில் விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் பெயர், ஆதார் எண், குடும்ப அட்டை விவரங்கள், திருமண நிலை, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல், மாவட்டம் மற்றும் மின் இணைப்பு பற்றிய விவரங்கள் உள்ளிட்ட விரிவான தனிப்பட்ட தகவல்கள் தேவை. கூடுதலாக, விண்ணப்பதாரர்கள் திட்டத்துடன் தொடர்புடைய நிதி பரிவர்த்தனைகளுக்கு தங்கள் வங்கி விவரங்களை வழங்க வேண்டும். உங்கள் பகுதியில் உள்ள முகாம்களில் இவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
Tags: இந்திய செய்திகள்