Breaking News

ஹஜ் பயணிகள் விமானம் விபத்து 200 பேர் பலி என பரவும் வதந்தி ? உண்மை என்ன 200 Hajj Pilgrims Died In Plane Crash?Fact Check

அட்மின் மீடியா
0
ஹஜ் பயணிகள் விமானம் விபத்து 200 பேர் பலி  என பரவும் வதந்தி ? உண்மை என்ன 200 Hajj Pilgrims Died In Plane Crash?Fact Check

பரவும் செய்தி

சவூதி அரேபியா செல்லும் வழியில் மொரிஷியஸில் ஹஜ் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 210 பேரும் உயிரிழந்தனர்.
#இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்... இந்த துயரமான சம்பவம் சற்று முன் 27-05-2025 செங்கடல் கடல் பகுதியில் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது... அனைவரும் பிரார்த்திப்போமாக...

உண்மை என்ன

செங்கடல் பகுதியில் ஹஜ் யாத்ரீகர்களின் விமானம் விபத்துக்குள்ளானதாக பரவும் வதந்தியை மவுரித்தேனியா அரசு  மறுத்துள்ளது

மவுரித்தேனிய 
இஸ்லாமிய விவகார அமைச்சகத்தின் ஹஜ் இயக்குநர் எல் வாலி தாஹா, இந்தக் கூற்றை மறுத்து, அனைத்து மவுரித்தேனிய யாத்ரீகர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும், எந்த அசம்பாவிதமும் இல்லாமல் புனித ஹஜ் பயணம் சென்றுள்ளார்கள் என்று உறுதிப்படுத்தினார்.

அதேபோல், அனைத்து யாத்ரீகர்களும் பாதுகாப்பாகவும்  சவுதி அரேபியாவிற்கு சென்றதாக மவுரித்தேனியா ஏர்லைன்ஸ் உறுதிப்படுத்தியது, 

மேலும் இணையத்தில் மவுரித்தேனியா என்றும் மொரிஷியஸ் நாடு என்றும் சில வீடியோக்கள் பரவுகின்றது

இணையத்தில் பரவும் அனைத்து வீடியோக்களும் பொய்யானது ஆகும்,

பல்வேறு விமான விபத்து புகைப்படமும், வீடியோவையும் ஒன்றினைத்து, ஏ.ஐ தொழில்நுட்ப உதவியுடன் எடிட் செய்து பரப்புகின்றார்கள் இந்த நேரம் வரை உலகில் ஹஜ் பயணம் சென்ற விமானங்கள் எதுவும் இதுவரை விபத்துக்குள்ளாக வில்லை அல்லாஹ் போதுமானவன்

யாரும் பொய்யான செய்தியை ஷேர் செய்யாதீர்கள்

200 Hajj Pilgrims Died In Plane Crash? Fact Check: 

The claim that a Mauritius airline carrying Hajj pilgrims crashed, killing 200 people, is false. 

Posts on X from May 27, 2025, alleged that a Mauritania Airlines plane carrying Hajj pilgrims crashed into the Red Sea, killing 200 passengers. 

However, these claims have been debunked. Mauritania Airlines confirmed that all pilgrims arrived safely in Saudi Arabia, and the video shared in the original posts was proven to be fake. 

No credible news outlets or official sources have reported such an incident

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback