சென்னை ஈசிஆர் சாலை பொழுதுபோக்கு பூங்கா ராட்சத ராட்டினத்தில் கோளாறு, அந்தரத்தில் தவித்த 30க்கும் மேற்பட்டோர் மீட்பு நடந்தது என்ன
சென்னை ஈசிஆர் சாலை பொழுதுபோக்கு பூங்கா ராட்சத ராட்டினத்தில் கோளாறு, அந்தரத்தில் தவித்த 30க்கும் மேற்பட்டோர் மீட்பு நடந்தது என்ன
சென்னை ஈசிஆர் அருகே இயங்கி வரும் பிரபல பொழுதுபோக்கு பூங்காவில் ராட்சத ராட்டினத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக 30க்கும் மேற்பட்டோர் அந்தரத்தில் தவித்தனர்.
இதன் விளைவாக 3 மணி நேரமாக அந்தரத்தில் தவித்த 30க்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
70 அடி உயரத்தில் சிக்கிய அனைவரும் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டு, வெளியில் அனுப்பப்பட்டனர். ராட்டினத்தில் சிக்கியோரில் ராட்சத கிரேன் உதவியுடன் குழந்தைகள், பெண்கள் முதலில் மீட்கப்பட்ட நிலையில், பின்னர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ராட்டினத்தில் என்ன நடந்தது?
என விளக்கம் அளித்துள்ள பொழுதுபோக்கு நிர்வாகம், “ Top Gun எனும் ராட்டினத்தை இயக்கியபோது மோட்டாரில் சத்தம் வந்ததால் உடனே நிறுத்தப்பட்டது ராட்டினத்தில் சிக்கியோரை மீட்க எங்களிடம் இருந்த கிரேன் மூலம் முயற்சி செய்தோம். உயரம் போதாததால் தீயணைப்பு துறையினரை வரவழைத்து மீட்புப்பணி நடைபெறுகிறது. ராட்டினத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்கப்படுவர்” எனக் குறிப்பிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்