பன்னிரண்டாம் வகுப்பு காமர்ஸ் படித்தவர்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடியாக 2ம் ஆண்டு படிக்கலாம்.
அட்மின் மீடியா
0
+2 பொதுத் தேர்வில் வணிகவியல் உள்பட அனைத்து பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் 2025-26ம் கல்வியாண்டில், பாலிடெக்னிக்கில் நேரடி 2ம் ஆண்டு (Lateral Entry) சேர முடியும் என தமிழ்நாடு தொழிநுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு!
பன்னிரெண்டாம் வகுப்பில் வணிகவியல், வரலாறு பாடங்கள் உள்ளிட்ட எந்தப் பாடப் பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றிருந்தாலும் வரும் கல்வி ஆண்டு (2025-2026) முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து பயில அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடியாக 2ம் ஆண்டு படிக்கலாம். பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன, அங்கு பிளஸ் 2 முடித்தவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டிலிருந்து படிக்கலாம்.
கணிதம்-அறிவியல் பாடப்பிரிவு மாணவர்கள் மட்டுமே பாலிடெக்னிக்கில் நேரடியாக 2ம் ஆண்டு சேர முடியும் என்ற விதி தளர்த்தப்பட்டு, அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் சேரலாம் என விரிவுபடுத்தப்பட்டுள்ளது!
இது குறித்து வெளியான் அறிவிப்பில்:-
ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, +2 தேர்வில் வணிகவியல் உட்பட அனைத்து பாடப்பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் 2025-26-ஆம் கல்வியாண்டில், நேரடி இரண்டாம் ஆண்டு பட்டயபடிப்பில் சேர்க்கை செய்து கொள்ள அனைத்து பலவகை தொழில் நுட்பக் கல்லூரி முதல்வர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.
Tags: கல்வி செய்திகள்