Breaking News

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம் - அரசுத் தேர்வுகள் துறை அறிவிப்பு Tamil Nadu Class 12th Results

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்  - அரசுத் தேர்வுகள் துறை அறிவிப்பு Tamil Nadu Class 12th Results

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 8ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மே 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஒரு நாள் முன் கூட்டியே வெளியாக உள்ளது.

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6. மேல்நிலை இரண்டாமாண்டு (-2) பொதுத் தேர்வுகள் மார்ச் - 2025 தேர்வு முடிவுகள் வெளியிடல், செய்திக்குறிப்பு

மார்ச் 2025-ல் நடைபெற்ற 20242025 -ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாமாண்டு (2) பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 08.05.2025 (வியாழக்கிழமை) அன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் காலை 9.00 மணிக்கு வெளியிடப்படப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

https://results.digilocker.gov.in

www.tnresults.nic.in

தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளைஅறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும். தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback