12ம் வகுப்பு படித்தவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் டிகிரி இலவசமாக படிக்க விண்ணப்பிக்கலாம் MADRAS UNIVERSITY FREE EDUCATION SCHEME 2025-2026
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, கல்லூரி சேர்க்கை தொடங்கி விட்டது. அந்த வகையில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகளில் இலவசமாக மாணவர்களுக்கு கல்வி வழங்கும் சென்னைப் பல்கலைக்கழக இலவசக் கவ்லித்திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. MADRAS UNIVERSITY FREE EDUCATION SCHEME (MUFES) 2025-2026
12ம் வகுப்பு படித்தவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் டிகிரி இலவசமாக படிக்க விண்ணப்பிக்கலாம்
சென்னைப் பல்கலைக்கழக இலவசக் கல்வி திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது
இலவசக் கல்வி திட்டத்துக்கு http://unom.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், பெற்றோரை இழந்த மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரி குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கல்வித்திறனை ஊக்குவிக்கும் வகையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில், சென்னை பல்கலைக்கழகம் கடந்த 2010-ம் ஆண்டு முதல் ‘சென்னை பல்கலைக்கழக இலவசக் கல்வி திட்டம்’ என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் நடப்பு கல்வி ஆண்டில் (2025 - 2026) இணைப்பு கல்லூரிகளில் (அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் சுயநிதி கல்லூரிகள்) சேர பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் http://unom.ac.in என்ற இணையத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்க சென்னை பல்கலை., முடிவெடுத்துள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் http://unom.ac.in என்ற இணையத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகளில் 2025-2026 கல்வியாண்டில் மாணவர்கள் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: கல்வி செய்திகள்