தயவு செய்து எனக்கு பாஸ் மார்க் போடுங்க- 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளில் ரூ.500 வைத்த மாணவர் முழு விவரம்
தயவு செய்து என்னை பாஸ் செய்யுங்க - 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளில் ரூ.500 பணத்தை வைத்த மாணவர் முழு விவரம்
கர்நாடக மாநிலத்தின் பெல்காவி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் கலந்து கொண்ட ஒரு மாணவர் ரூ.500 பணத்தை பதில்தாளுடன் வைத்து, “இந்த ரூ500 எடுத்துட்டு டீ குடிங்க சார், பாஸ் பண்ணுங்க” என எழுதியிருக்கிறார். மேலும், “நீங்க பாஸ் பண்ணினா பணம் தர்றேன்” எனும் வாக்குறுதியும் சில மாணவர்களின் பதில்தாள்களில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு மாணவர், “நீங்க பாஸ் பண்ணி விடலன்னா, என் பெற்றோர்கள் என்னை கல்லூரிக்கு அனுப்ப மாட்டாங்க” என உருக்கமாக எழுதியுள்ளார். சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வகையான நடத்தை இன்றைய மாணவர்களிடையே ஒரு கவலையான போக்கைக் காட்டுகிறது. படித்து கடினமாக உழைப்பதற்குப் பதிலாக, சிலர் வெற்றிக்கான குறுக்குவழிகளைத் தேடுகிறார்கள்.
இது நேர்மையான மாணவர்களுக்கு அநீதியானது மட்டுமல்ல; இது கல்வியின் மீதான மரியாதை இல்லாததையும் காட்டுகிறது. மாணவர்களுக்கு சரியான மதிப்புகளைக் கற்பிக்கவும், உண்மையான வெற்றி கடின உழைப்பால் மட்டுமே வரும் என்பதை அவர்களுக்கு நினைவூட்டவும் பள்ளிகளும் குடும்பங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
Tags: இந்திய செய்திகள்