இனி இலவசம் இல்லை கூகுள் பே மூலம் பில் செலுத்துபவர்களுக்கு சேவைக் கட்டணம் முழு விவரம் gpay convenience fee tamil full details
Google Pay begins charging convenience fees on bill payments via credit, debit cards.
🔺These charges are applicable while paying electricity, water and cooking gas bills.
🔺UPI payments made directly through bank accounts continue to be free.
🔺Fees ranges from 0.5% to 1% of the transaction value, plus the applicable GST is being levied on these transactions.
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு இந்த புதிய கொள்கை நடைமுறைக்கு வருகிறது. கட்டணங்கள் பரிவர்த்தனை மதிப்பில் 0.5% முதல் 1% வரை இருக்கும்.
டிஜிட்டல் வழியாக மொபைல் மூல பணம் பரிமாற்றம் செய்வதில் கூகுள் பே, போன் பே, பே டி.எம்., ஆகிய செயலிகள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. யுபிஐயில் இலவச பரிவர்த்தனைகளை அனுபவித்து வரும் கூகுள் பே பயனர்கள் இப்போது குறிப்பிட்ட பில் பேமெண்ட்டுகளுக்கு கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
GPay பயனர்கள் அதனை இலவசமாக பயன்படுத்தி வந்த நிலையில், இனி குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக OTT சந்தாக்கள், காப்பீட்டு பிரீமியங்கள், கடன் திருப்பி செலுத்துதல், மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம், மொபைல் போன் ரீசார்ஜ் என எல்லாவற்றையும் யு.பி.ஐ. மூலம் செய்து கொள்கிறோம்.
இந்நிலையில் யுபிஐ நிறுவனங்கள் இலவசமாக வழங்கப்பட்ட பில் கட்டணங்களுக்கு கன்வீனியன்ஸ் கட்டணம் வசூலிக்க தொடங்கிவிட்டன . அந்த வகையில் கூகுள் பே, மின்சாரம், எரிவாயு போன்ற பில் கட்டணங்களுக்கு கன்வீனியன்ஸ் கட்டணம் வசூலிக்க தொடங்கிவிட்டது.
டிஜிட்டல் பேமெண்ட்ஸ் நிறுவனமானது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது,
பரிவர்த்தனை தொகை மதிப்பில் 0.5% முதல் 1% வரையில் கட்டணம், ஜிஎஸ்டியுடன் சேர்த்து வசூலிக்கிறது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தும் பயனர்களுக்கு மட்டும் இப்போதைக்கு இந்த கன்வீனியன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஏற்கனவே ரீசார்ஜூக்கு ரூ.3 சேவை கட்டணமாக கூகுள் பே வசூலித்து வரும் நிலையில், மின்கட்டணம், கேஸ் கட்டணம் உள்ளிட்ட சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பில் தொகையில் இருந்து 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரையில் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி
