Breaking News

மெக்சிகோ கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆழ்கடலில் வாழும் துடுப்பு மீன்கள் - பேரழிவுக்கான அறிகுறி என மக்கள் அச்சம் Doomsday fish appears in Mexico

அட்மின் மீடியா
0

மெக்சிகோ கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆழ்கடலில் வாழும் துடுப்பு மீன்கள் - பேரழிவுக்கான அறிகுறி என மக்கள் அச்சம் Doomsday fish appears in Mexico

மெக்சிகோவில் ஒரு அரிய, பளபளப்பான டூம்ஸ்டே மீன் இதனை துடுப்பு மீன் என்றும் அழைப்பார்கள் இந்த மீன்கள் பொதுவாக 60 முதல் 3,200 அடி ஆழத்தில் வாழும். அவை பார்ப்பதற்கு மிகவும் அரிதானவை. ஆழ்கடலில் மட்டுமே இருக்கும் அரிய வகை துடுப்பு மீன், மெக்சிகோவில் கரை ஒதுங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். 



மெக்சிகோவில் உள்ள பஜா கலிபோர்னியா சுர் (Baja California Sur) என்ற பகுதியில் உள்ள கடற்கரையில், இந்த துடுப்பு மீன் தென்பட்டுள்ளது. இதனை மீண்டும் கடலுக்குள் விட்டுள்ளனர் ஆனால் அந்த மீன் மீண்டும் மீண்டும் கரைக்கு வந்தது 

டூம்ஸ்டே மீன் என்று அழைக்கப்படும் இந்த ஆழ்கடல் உயிரினம் பெரும்பாலும் இயற்கை பேரழிவுகளுடன் தொடர்புடையது என கூறப்படுகின்றது. 

அதாவது இந்த உயிரினம், பேரழிவு ஏற்படுவதற்கு முன்பு கடலின் ஆழத்திலிருந்து மேற்பரப்புக்கு வருகின்றது என்று சிலர் கூறுகிறார்கள்.

ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகளில், துடுப்பு மீனின் தோற்றம் வரவிருக்கும் பேரழிவின், குறிப்பாக பூகம்பங்களின் முன்னோடியாகக் கருதப்படுகிறது.

2011 ஆம் ஆண்டு நிலநடுக்கத்திற்கு முன்னர் ஜப்பானின் கடற்கரையில் பல துடுப்பு மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த மூடநம்பிக்கை பிரபலமடைந்தது, இது இயற்கை பேரழிவுகளுடன் அதன் தொடர்பைப் பற்றிய பரவலான நம்பிக்கையைத் தூண்டியது.

மேலும் 2024ஆம் ஆண்டு நவம்பரில் அமெரிக்காவின் கலிபோர்னியாவிலும் இதே போன்று துடுப்பு மீன் கரை ஒதுக்கியதும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதுபோன்று, இப்போது மெக்சிகோவிலும் ஏற்படுமோ என்று அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1893127548756009174

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback