Delhi Earthquake டெல்லியில் அதிகாலையில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - மக்கள் அச்சம்
டெல்லியில் அதிகாலையில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - மக்கள் அச்சம்
டெல்லியில் இன்று (பிப். 17) அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. புது டெல்லியில் பூமியின் ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 5:36 மணிக்கு நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. டெல்லியில் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி., கேமராக்களில் கட்டிடங்கள், வீடுகள், சாலையோர மின்கம்பங்கள் குலுங்கும் வீடியோ காட்சிகள் பதிவாகி இணையத்தில் வெளியாகி உள்ளன.
https://x.com/adminmedia1/status/1891311379962847396
Tags: இந்திய செய்திகள்
