Breaking News

செவ்வாய் கிரகத்தில் பழமையான கடற்கரை கண்டுபிடிப்பு சீன விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல் china mars beach

அட்மின் மீடியா
0

செவ்வாய் கிரகத்தில் பழமையான கடற்கரை கண்டுபிடிப்பு சீன விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல் china mars beach



செவ்வாய் கிரகத்தில் கடற்கரை இருந்ததற்கான தடயம் கிடைத்துள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது

2020ஆம் ஆண்டு சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் ஜூராங் ரோவர் கருவியை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது. இக்கருவி 3,300 கிமீ விட்டம் கொண்ட அங்குள்ள யுடோபியா பிளானிஷியா சமவெளி பகுதியில் தரையிரங்கியது. 

இந்த பகுதியில் பெரிய நீர்நிலை இருந்ததாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.ஜூராங் ரோவர் கருவிக்கொண்டு சீனாவின் குவாங்சோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜியான்ஹுய் லி தலைமையிலான ஆராய்ச்சி குழு, 

அமெரிக்க விஞ்ஞானிகளுடன் சேர்ந்து செய்த ஆய்வின்படி, 360 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பழமையான கடற்கரை படிமத்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கடற்கரை படிம கண்டுபிடிப்புக்கு டியூடெரோனிலஸ் என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.இதுதொடர்பான ஆய்வுக் கட்டுரையை PNAS ஆய்வு இதழில் சீனா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

இதேபோல், செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், அங்கு பூமத்திய ரேகைக்கு அடியில் தூசி நிறைந்த பனிக்கட்டிகள் இருப்பதை கண்டுபிடித்து தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback