Breaking News

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக்கோரி, அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

அட்மின் மீடியா
0

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக்கோரி, அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2015, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் 3 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி 2023 ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும் 58 முறைக்கும் மேல் அவருடைய காவல் நீட்டிக்கப்பட்டு சுமார் 471 நாட்கள் சிறையில் இருந்தார் இந்நிலையில் உச்சநீதிமன்றம்  செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. 

அதன்பின்பு 26.09.2025 அன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். 

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி, அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது. 

அதில், செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இது அவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சாட்சிகளாக உள்ளவர்கள் முன்பு இவரின் கீழ் பணி புரிந்தவர்கள். எனவே அவர்கள் செந்தில் பாலாஜிக்கு எதிராக சாட்சியம் அளிக்க அச்சப்படக்கூடும். 

இது வழக்கில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அவரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback