மயிலாடுதுறையில் பயங்கரம் சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இரண்டு பேர் வெட்டி படுகொலை முழு விவரம்
மயிலாடுதுறையில் இரண்டு பேர் வெட்டி படுகொலை 2 பேர் கைது நடந்தது என்ன முழு விவரம்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட முட்டம் கிராமத்தில், இன்ஜினியரிங் கல்லூரி மாணவன், பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞன் ஆகிய இரண்டு பேரை சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை அருகே முட்டம் வடக்குதெரு பகுதியில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறை சார்பில் முட்டம் பகுதியில் சாராய ரெய்டு நடைபெற்றுள்ளது. அதில் சாராயவியாபாரி ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ராஜ்குமார் ஜாமீனில் வெளிவந்துள்ளார்
இந்நிலையில் தெருவில் ஏன் சாராயம் விற்கிறீர்கள் என்று கேட்ட 17 வயது சிறுவனை சாராய வியாபாரிகள் அடித்துள்ளார்கள் இதனை தட்டிகேட்ட முட்டம் வடக்குத்தெருவை சேர்ந்த கல்யாண்குமார் என்பவரது மகன் பாலிடெக்னிக் படித்துவிட்டு வேலை தேடி வந்த இளைஞர் 25 வயதான ஹரிஷ் மற்றும் உறவினர் வீட்டிற்கு வந்திருந்த பேச்சாவடி பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவரது மகன் இன்ஜினியரிங் படிக்கும் மாணவன் 20 வயதான ஹரிசக்தி ஆகியோரை சாராய வியாபாரிகள் ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை ஆகியோர் தகறாரில் ஈடுபட்டு, சராமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இதில் ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகிய இரண்டு பேரும் படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்
இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உயிரிழந்த நபர்களின் உறவினரிடம் விசாரணை மேற்கொண்டார். இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த இரட்டை படுகொலை குறித்து பெரம்பூர் காவல் நிலைய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ராஜ்குமார், தங்கதுரை மூவேந்தனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
முன்விரோதம்தான் காரணம் - காவல்துறை
மயிலாடுதுறையில் இருவர் உயிரிழந்த விவகாரத்திற்கு சாராய விற்பனை காரணம் அல்ல எனவும் ஒரே தெருவில் வசித்த இளைஞர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறே சம்பவத்திற்கு காரணம் எனவும் ,தினேஷ், மூவேந்தன் ஆகியோர் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது;
சம்பவத் தினத்தன்று மூவேந்தன் உள்ளிட்டோர் தினேஷிடம் தகராறு செய்து தாக்கியுள்ளனர். தடுக்க வந்த ஹரிஷ், சக்தி ஆகியோரை மூவேந்தன் உள்ளிட்டோர் கத்தியால் தாக்கியுள்ளனர் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்
