Breaking News

அப்பா என்ற பெயரில் புதிய செயலியை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்..! முழு விவரம்

அட்மின் மீடியா
0

அப்பா என்ற பெயரில் புதிய செயலியை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்..! முழு விவரம்



APPA’ எனும் அனைத்து பள்ளி பெற்றோர் ஆசிரியர் கூட்டமைப்பின் புதிய செயலியை அறிமுகப்படுத்தினார் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை கடலூருக்கு சென்றார். அங்கு அவர், கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதனுடன், அவர் முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் நேற்று இரவு நெய்வேலி சுற்றுலா மாளிகையில் தங்கினார்.

இந்த நிலையில், வேப்பூர் அருகே திருப்பெயர் கிராமத்தில் இன்று (பிப்.22) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘பெற்றோர்களை கொண்டாடுவோம்’ மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தி வருகிறது. 

இதில், பெற்றோர் ஆசிரியர் கழக செயலியான ‘அப்பா’ என்ற பெயரில் புதிய செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback