Breaking News

டெல்லி முதல்வராக ரேகா குப்தா அறிவிப்பு முழு விவரம் 𝐑𝐞𝐤𝐡𝐚 𝐆𝐮𝐩𝐭𝐚 𝐭𝐨 𝐛𝐞 𝐭𝐡𝐞 𝐧𝐞𝐰 𝐂𝐡𝐢𝐞𝐟 𝐌𝐢𝐧𝐢𝐬𝐭𝐞𝐫 𝐨𝐟 𝐃𝐞𝐥𝐡𝐢

அட்மின் மீடியா
0

டெல்லி முதல்வராக ரேகா குப்தா அறிவிப்பு முழு விவரம் 𝐑𝐞𝐤𝐡𝐚 𝐆𝐮𝐩𝐭𝐚 𝐭𝐨 𝐛𝐞 𝐭𝐡𝐞 𝐧𝐞𝐰 𝐂𝐡𝐢𝐞𝐟 𝐌𝐢𝐧𝐢𝐬𝐭𝐞𝐫 𝐨𝐟 𝐃𝐞𝐥𝐡𝐢



பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்  நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. 

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது இதில் பாஜக 48 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றது

மேலும் புதுடில்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியை தழுவினார்.

27 ஆண்டுகளுக்குப் பின் டெல்லியில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் பாஜக வெற்றி பெற்றது

இந்நிலையில் டெல்லி முதல்வராக பாஜக தேசிய மகளிரணி துணைத்தலைவர் திருமதி.ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றார்..!நாளை காலை 11 மணிக்கு ராம் லீலா மைதானத்தில் பதவியேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது

ரேகா குப்தா

ரேகா குப்தா 1974 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜூலானா நகரில் பிறந்தார்.

ரேகா குப்தா Rekha Gupta இந்தியாவின் தில்லியைச் சேர்ந்த பாரதீய சனதா கட்சியின் தலைவர் ஆவார். 

தில்லி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் பொதுச் செயலாளராகவும் தலைவராகவும் இருந்துள்ளார். 

பாரதீய சனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலும் கட்சியின் தில்லி மாநில ஒன்றியத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார்.

REKHA GUPTA தற்போது டில்லியில் உள்ள SHALIMAR BAGH தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 𝐑𝐞𝐤𝐡𝐚 𝐆𝐮𝐩𝐭𝐚 𝐭𝐨 𝐛𝐞 𝐭𝐡𝐞 𝐧𝐞𝐰 𝐂𝐡𝐢𝐞𝐟 𝐌𝐢𝐧𝐢𝐬𝐭𝐞𝐫 𝐨𝐟 𝐃𝐞𝐥𝐡𝐢

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback