ஹமாஸ் படையினருக்கு முத்தம் கொடுத்து விடைபெற்ற இஸ்ரேலிய பிணை கைதி வைரல் வீடியோ
ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பிணைக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று 6 இஸ்ரேல் பிணை கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தது. அப்போது, இஸ்ரேலிய பணய கைதி ஒமர் ஷெம் டம் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 2 பேருக்கு நெற்றியில் முத்தம் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றது
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்ற இஸ்ரேலியர்களை ஹமாஸ் விடுவித்து வருகின்றனர்.
பதிலுக்கு பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்து வருகிறது.அண்மையில் அப்படி 3 பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினர் விடுவித்தனர். அதில் ஒமர் ஷெம் டோவ் என்ற பிணைக் கைதி, ஹமாஸ் படையை சேர்ந்த இரண்டு பேரின் நெற்றி பகுதியில் முத்தம் கொடுத்து விடைபெற்றார்.
விடுவிக்கப்பட்ட மூவருக்கும் சான்று அளிக்கப்பட்டது. அவர்கள் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டடனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/BRICSinfo/status/1893255669379117230
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ
