Breaking News

குவைத்தில் ரமலான் பிறை தென்பட்டால் தெரிவிக்க பொதுமக்களுக்கு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
குவைத்தில் பிறை தென்பட்டால் தெரிவிக்க பொதுமக்களுக்கு அறிவிப்பு



குவைத்தில் ரமலான் மாத தொடக்கத்தை முன்னிட்டு மாதப்பிறை கண்காணிப்பு ஆய்வுக்குழு அதிகாரிகள் பிப்ரவரி-28,2025 வெள்ளிக்கிழமை மாலையில் ஒன்று கூடுகிறது. 

முபாரக் அப்துல்லா அல்-ஜாபர் பிராந்திய உச்ச நீதிமன்ற அலுவலகத்தில் வைத்து இந்த கூட்டம் நடைபெற உள்ளதாக இன்று(23/02/25) ஞாயிற்றுக்கிழமை நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

மேலும் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிப்ரவரி-28,2025 வெள்ளிகிழமை அன்று மாலை முதல் ரம்ஜான் மாத பிறப்பை நாட்டில் வசிக்கின்ற குடிமக்கள் அல்லது வெளிநாட்டினர் யாராவது கண்ணால் பார்த்தால் உடனடியாக 25376934 என்ற  எண்ணை தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பு மார்ச் 1-ஆம் தேதி சனிக்கிழமை முதல் தொடங்கும் என்று ஜோதிட கணிப்புகள் வெளியாகியுள்ளன.

ஆனால் வளைகுடாவை பொறுத்த வரையில் மாதப்பிறை தென்படுவதன் அடிப்படையில் தான் ரமலான் துவங்கியதாக அதிகாரப்பூர்வ இறுதி முடிவு நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படும் என்பது மரபு ஆகும்.

Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback