Breaking News

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு வைரல் புகைப்படங்கள்

அட்மின் மீடியா
0

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு வைரல் புகைப்படங்கள்



தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, பெங்களூரு சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அந்த வழக்கில் தொடர்புடைய தங்கம், வெள்ளி, வைர நகைகள் அடங்கிய 6 டிரங்க் பெட்டிகள், 1,562 ஏக்கர் மதிப்பிலான நில ஆவணங்கள், கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்தன

வழக்கு முடிந்து போன நிலையில், ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகள், சொத்து ஆவணங்களை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைக்கும்படி கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இன்று ஜெயலலிதாவிற்கு சொந்தமான 1.2 கிலோ எடை உள்ள தங்க ஒட்டியாணம், ஒரு கிலோ எடையுள்ள தங்க கிரீடம், தங்க வாட்சுகள், தங்க வாள், தங்க கைக்கடிகாரம், 60 கிராம் எடையுள்ள தங்கப்பேனா, ஜெயலலிதா உருவம் பொறிக்கப்பட்ட தங்கத்தட்டு உள்ளிட்ட நகைகள் அனைத்தும் சரி பார்த்து பட்டியல் தயார் செய்து 6 பெட்டிகளில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. 

27 கிலோ தங்க நகைகளுடன் தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான ரூ.1,526 ஏக்கர் நிலங்கள் ஆவணங்களும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் புகைப்படங்கள் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1890744842176639283

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback