Breaking News

புதிய கல்விக்கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்க முடியாது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

அட்மின் மீடியா
0

புதிய கல்விக்கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்க முடியாது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

புதிய கல்வி கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்க சட்டத்தில் இடமில்லை  என காசியில் 3வது தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்


காசி தமிழ்ச் சங்கமம் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் பேசினார்.

தமிழ்நாட்டிற்கு நிதி நிலுவையில் இருப்பது நன்றாக தெரியும் என்றும், புதிய கல்வி கொள்கையை ஏற்காததால் நிதி விடுவிக்க சட்டத்தில் இடமில்லை என்றும் தெரிவித்தார்

மேலும், தமிழகம் மட்டும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், தமிழக அரசு, அரசியல் உள்நோக்கத்தாலேயே புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது என குற்றம்சாட்டினார்

புதிய கல்விக் கொள்கையில் நாங்கள் தமிழை படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை என்றும், அனைத்து மாநிலங்களும் தங்களுடைய தாய்மொழியை படிக்கலாம் என்றுதான் சொல்கிறோம். அதே நேரத்தில் மூன்றாவதாக ஒரு மொழியை படித்துக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறோம் என்று விளக்கமளித்தார்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback