நாம் தமிழர் கட்சியில் இருந்து ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பாவேந்தன் விலகல்
நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பாவேந்தன், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சியை சீமான் வீழ்ச்சி பாதையில் கொண்டு செல்வதாக பாவேந்தன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் நேற்று கட்சியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பாவேந்தன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சியை சீமான் வீழ்ச்சி பாதையில் கொண்டு செல்வதாக பாவேந்தன் குற்றச்சாட்டியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சீமான் இன்று செல்லும் நிலையில் பாவேந்தன் கட்சியில் இருந்து விலகியுள்ளார். கடந்த 2019ல் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியிலும், 2021ல் சோளிங்கர் சட்டமன்ற தொகுதியிலும் நா.த.க. சார்பில் பாவேந்தன் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடதக்கது.
Tags: அரசியல் செய்திகள்
