சென்னையில் பெண்களுக்கான பிங்க் ஆட்டோ திட்டம் விரைவில் முழு விவரம்
சென்னையில் பெண்களுக்கான பிங்க் ஆட்டோ திட்டம் விரைவில் முழு விவரம்
தமிழகத்தின் தலைநகர் சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியமாக தலா ரூ. 1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி, ரூ.2 கோடி செலவில் 200 'பிங்க் ஆட்டோ' திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார்.
இந்நிலையில் இந்த திட்டம் தொடர்பாக மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது
அதில் ஆட்டோ முழுவதும் பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும்,
பெண்கள் மட்டும்தான் ஓட்டுநராக இருக்க வேண்டும்,
அவர்கள் பிங்க் நிற சீருடை அணிந்திருக்க வேண்டும்,
ஆட்டோவில் ஜிபிஎஸ், வாகன இருப்பிட கண்காணிப்பு கருவி இருக்க வேண்டும் என மோட்டர் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு அரசானை வெளியிடப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்
