மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை வாய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
திண்டுக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் திண்டுக்கல் மற்றும் பழனி சகி - ஒருங்கிணைந்த சேவை மையங்களில் (Sakhi-One Stop Centre) வழக்குப் பணியாளர்-1&2, பாதுகாவலர்-1&2, பல்நோக்கு உதவியாளர்-1&2 ஆகிய பதவிகளுக்கு முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இப்பதவிக்கான விண்ணப்பம் மற்றும் தகவல்களை திண்டுக்கல் மாவட்ட dindigul.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, அறை எண்.88 (தரைதளம்), மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், திண்டுக்கல் மாவட்டம்-624004 என்ற முகவரிக்கு வரும் 20.03.2025 மாலை 05.45-க்குள் அனுப்பப்பட வேண்டும் எனவும், தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,
திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் திண்டுக்கல் மற்றும் பழனி சகி - ஒருங்கிணைந்த சேவை மையங்களில் (Sakhi-One Stop Centre) வழக்குப் பணியாளர்-1, வழக்குப் பணியாளர்-2, பாதுகாவலர்-1. பாதுகாவலர்-2. பல்நோக்கு உதவியாளர்-1. பல்நோக்கு உதவியாளர்-2 ஆகிய பதவிகளுக்கு முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வழக்குப் பணியாளர்-1 பணியிடத்திற்கு திண்டுக்கல் மற்றும் பழனி பகுதிகளில் தலா ஒரு பணியிடம் என 2 காலிப்பணியிடங்களும்,
வழக்குப் பணியாளர்-2 பணியிடத்திற்கு பழனி பகுதியில் 3 காலிப்பணியிடங்ளும் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். ஒப்பந்த ஊதியமாக மாதம் ரூ.18,000 வழங்கப்படும்.
பாதுகாவலர்-1 பணியிடத்திற்கு பழனி பகுதியில் ஒரு காலிப்பணியிடமும்,
பாதுகாவலர்-2 பணியிடத்திற்குதிண்டுக்கல்பகுதியில்ஒருகாலிப்பணியிடமும் என இரண்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்குஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஒப்பந்த ஊதியமாக மாதம் ரூ.12,000 வழங்கப்படும்.
பல்நோக்கு உதவியாளர்-1 பணியிடத்திற்கு பழனி பகுதியில் ஒரு காலிப்பணியிடமும், பல்நோக்கு உதவியாளர் பணியிடத்திற்கு திண்டுக்கல் மற்றும் பழனி பகுதிகளில் தலா ஒரு பணியிடம் என 2 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
இந்த பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். ஒப்பந்த ஊதியமாக மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.
இப்பதவிக்கான விண்ணப்பம். கல்வித்தகுதி மற்றும் கூடுதல் தகவல்களை திண்டுக்கல் மாவட்ட dindigul.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை "மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, அறை எண்.88 (தரைதளம்), மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், திண்டுக்கல் மாவட்டம்-624004" என்ற முகவரிக்கு வரும் 20.03.2025 கடைசி நாள்.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://cdn.s3waas.gov.in/s3f74909ace68e51891440e4da0b65a70c/uploads/2025/02/2025022424.pdf
Tags: வேலைவாய்ப்பு
