ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் அபார வெற்றி!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் அபார வெற்றி!
நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்தது.
திமுக தவிர தேர்தலில் போட்டியிட்ட 45 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடந்தது.
இதில், திமுக உட்பட மொத்தம் 46 பேர் போட்டியிட்டனர். 74,260 ஆண்கள், 80,376 பெண்கள், 21 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1.55 லட்சம் பேர் வாக்களித்தனர்.
இதில், திமுக உட்பட மொத்தம் 46 பேர் போட்டியிட்டனர். 74,260 ஆண்கள், 80,376 பெண்கள், 21 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1.55 லட்சம் பேர் வாக்களித்தனர்.
வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் போடப்பட்டு உள்ளன. 17 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்பட்டது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 1,14,439 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.
திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்
நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட சீதாலட்சுமி 23810 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/AcResultByeFeb2025/candidateswise-S2298.htm
தலைநகர் டெல்லியில் ஆட்சி அமைக்க போவது யார் வாக்கு எண்ணிக்கை முன்னிலை முழு நிலவரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2025/02/delhi-voting-result-2025.html
Tags: அரசியல் செய்திகள்