சீமான் - விஜயலட்சுமி வழக்கின் தீர்ப்பு முழு விவரம்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது எனக் கூறி சீமான் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரை ரத்து செய்யக்கோரி சீமான் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த வாரம் பிறப்பித்த உத்தரவின் விவரம்...
சீமான் வற்புறுத்தலினால் ஆறு, ஏழு முறை கருக்கலைப்பு செய்ததாகவும், தன்னிடம் இருந்து பெருந்தொகையை சீமான் பெற்று உள்ளதாகவும் விஜயலட்சுமி புகாரில் தெரிவித்துள்ளார்
விஜயலட்சுமி வாக்குமூலத்தில் கூறியுள்ள புகார்கள், சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டை உறுதிப்படுத்துகிறது
பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது; அதை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது
வழக்கை ஆராய்ந்ததில் விஜயலட்சுமிக்கு, சீமான் மீது எந்த காதலும் இல்லை; குடும்பம் மற்றும் திரைத்துறை பிரச்னை காரணமாக சீமானை விஜயலட்சுமி குடும்பத்தினர் அணுகி உள்ளனர்; அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி விஜயலட்சுமி உடன் சீமான் உறவு வைத்துள்ளார் - சென்னை உயர் நீதிமன்றம்
இந்த புகாரின் அடிப்படையில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்நிலையில் இந்த வழக்கு இன்று (பிப்.17) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என வளசரவாக்கம் காவல்துறைக்கு உத்தரவிட்டு சீமான் மனுவை தள்ளுபடி செய்தார்.
அந்த தீர்ப்பில்,
நடிகை விஜயலட்சுமிக்கு, சீமான் மீது எந்த காதலும் இல்லை, குடும்ப பிரச்சினை திரைத்துறை பிரச்சனை காரணமாக சீமானை விஜயலட்சுமி குடும்பத்தினர் அணுகி உள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகை விஜயலட்சுமியுடன் சீமான் உறவு வைத்துள்ளார்,பின்னர் திருமணம் செய்ய தவறியதால் ,நடிகை விஜயலட்சுமி புகார் அளித்துள்ளதாக நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்வேறு காரணங்களால் முதல் புகார் குறித்து காவல்துறை விசாரித்து முடிக்க முடியவில்லை என்றும், விஜயலட்சுமியை திருமணம் செய்துகொள்வதாக சீமான் தெரிவித்ததன் அடிப்பைடையில் முதல் புகார் திரும்ப பெறப்பட்டதாகவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ள நீதிபதி ஜி.கே. இளந்திரையன் பின்னர் கடந்த 2023 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாவது புகார் அளிக்கப்பட்டதாகவும் அதனடிப்படையில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, திருவள்ளுர் மகிளா நீதிமன்ற நீதிபதியிடம் நடிகை விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்துள்ளதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்..
அதற்கு முன்பே சீமான் வற்புறுத்தலினால் ஆறு ஏழு முறை விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்துள்ளதும் விஜயலட்சுமியிடமிருந்து பெருந்தொகை சீமான் பெற்றுள்ளதாகதாகவும் விஜயலட்சுமி மகிளா நீதிமன்ற நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி வாக்குமூலத்தில் கூறியுள்ள புகார்கள் சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துகிறது என்றும், மிரட்டலின் அடிப்படையில் சீமானுக்கு எதிரான இரண்டாவது புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளது தெளிவாகிறது என்றும், பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது ,ஜாமீனில் வெளிவர குற்றம் , புகார்தாரர் விசாரிக்க விரும்பவில்லை என்றாலும், அதை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது என்றும் எனவே சீமான் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்
