Breaking News

சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது எனக் கூறி சீமான் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.  

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.  



இந்த புகாரின் அடிப்படையில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (பிப்.17) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என வளசரவாக்கம் காவல்துறைக்கு உத்தரவிட்டு சீமான் மனுவை தள்ளுபடி செய்தார்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback