அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி - இன்று திட்டமிட்டபடி ஜாக்டோ ஜியோ ஆர்பாட்டம்
அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி - இன்று திட்டமிட்டபடி ஜாக்டோ ஜியோ ஆர்பாட்டம்
பேச்சு வார்த்தை தோல்வி:-
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலர்கள் சங்கத்தினர் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
அதன்படி கோரிக்கையை வலியுறுத்தி (பிப்.25) ஜாக்டோ ஜியோ சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
போராட்ட அறிவிப்பை அடுத்து, அரசு அலுவலர்கள் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க ஏதுவாக அமைச்சர்கள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினருடன் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போராட்டத்தை 4 வாரங்களுக்கு தள்ளி வைக்குமாறு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது,
அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர்கள் குழு இன்று சமரச பேச்சுஇந் நிலையில், நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டம் அறிவிப்பு:-
ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு சென்னை தலைமை செயலகத்தில் நேற்று இரவு நிருபர்களை சந்தித்தனர். அப்போது ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் :-
முதல்-அமைச்சருடன், அமைச்சர்கள், நிதித்துறை செயலாளர், முதன்மை செயலாளர் ஆகியோர் எங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். இது சம்பந்தமாக 4 வார அவகாசம் அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. போராட்டங்களை தள்ளிவைக்கவும் கேட்கப்பட்டது.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் பேசி, இனிமேலும் கால அவகாசத்தை தர இயலாது என்ற அடிப்படையில், நாளை (அதாவது இன்று) திட்டமிட்டபடி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக தற்காலிக விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமாக காலை 11 மணிக்கு நடைபெறும். போராட்டத்தை மேலும் முன்னெடுத்து செல்வதற்கு முன்னதாக, அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
எங்கள் கோரிக்கைகளை அரசு நிராகரிக்கவில்லை. அவகாசம் கேட்டு இருக்கிறார்கள். மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டமாக மாறியுள்ளது. நிராகரித்து இருந்தால் போராட்டத்தை முன்னெடுத்து சென்றிருப்போம்.
ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு மீண்டும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் முடிவெடுப்போம். அடுத்தகட்டமாக அரசுடனான பேச்சுவார்த்தைக்கும் தயாராக உள்ளோம். பட்ஜெட்டில் இதுதொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என நம்புகிறோம்."இவ்வாறு அவர் கூறினார்.
வழக்கு:-
திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜியோ ஜாக்டோ திருச்சியில் 04.02.2025 நடைபெற்ற தங்களது மாநில அளவிலான கூட்டத்தில் அனைத்து தாலூகா தலைநகரங்களிலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 25.02.2025 அன்று போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் அரசு ஊழியர்கள் இவ்வாறு ஸ்டிரைக் நடத்துவது சட்ட விரோதம் என்று தடை செய்து உள்ள நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ள ஸ்டிரைக் மற்றும் சாலை மறியல் சட்ட விரோதமானது எனவே ஜாக்டோ ஜியோ நடத்த உள்ள ஸ்டிரைக் மற்றும் சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்
இந்த மனு இன்று நீதிபதிகள் நிஷா பானு மற்றும் நீதிபதி ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்த நான்கு அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள் பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என உத்தரவிட்டு இந்த வழக்கில் அரசு தலைப்பில் என்ன பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.
Tags: தமிழக செய்திகள்
