Breaking News

உ.பி. கும்பமேளாவில் நீராடும் பெண்களின் வீடியோக்களை ஆன்லைனில் விற்கும் கும்பல் அதிர்ச்சி தகவல்

அட்மின் மீடியா
0

உ.பி. கும்பமேளாவில் நீராடும் பெண்களின் வீடியோக்களை ஆன்லைனில் விற்கும் கும்பல் அதிர்ச்சி தகவல்



உ.பி. கும்பமேளாவில் நீராடும், உடை மாற்றும் பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்து இணையம் மூலம் விற்கும் விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோக்களை வாங்கும் நபர்களும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக சமூக வலைதள பக்கங்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. 40 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த நிகழ்விற்கு, உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள்  கலந்துகொண்டு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் ஆற்றில் பெண்கள் குளித்து உடை மாற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒரு கும்பல் சமூக ஊடகங்களில் விற்பதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. 

மேலும் அந்த படங்கள் வீடியோக்கள் பகிரப்படும் குரூப்கள் 2000 முதல் 3000 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கிறதாம். மேலும் பேஸ்புக் யூடியூப் தளங்களிலும் தனியே பக்கங்கள் தொடங்கி வீடியோக்கள் பகிரப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அப்படங்கள் மற்றும் வீடியோக்களை விற்பனை செய்வதற்காக அவற்றில் சிலவற்றை டெலிகிராமில் டீஸர்களாகப் பகிர்ந்து இந்த குரூப்களில் சேர ரூ.1,999 முதல் ரூ.3,000 வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.

இந்நிலையில், வீடியோக்கள் வெளியிட்டதாக கூறப்படும் இன்ஸ்ட்கிராம் கணக்கு மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இரண்டு சமூக ஊடக கணக்குகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட நடவடிக்கைகள் துவங்கப்பட்டு உள்ளன. விசாரணை நடந்து வருகிறது. இதனை பதிவேற்றிய நபரின் கணக்கை மெட்டாவிடம் இருந்து கேட்டுள்ளோம். விவரங்கள் கிடைத்ததும் கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளனர்.

News Source

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback