ஸ்பெயின் கார் பந்தயத்தில் விபத்து உயிர் தப்பிய நடிகர் அஜித் குமார் வைரல் சிசிடிவி வீடியோ
ஸ்பெயின் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் கார் விபத்து வைரல் சிசிடிவி வீடியோ
நடிகர் அஜித்குமார் ஸ்பெயின் நாட்டில் நடக்கும் பந்தயத்தில் பங்கேற்றுள்ளார் இதில் தகுதி சுற்றின் போது அஜித்குமார் ஓட்டி வந்த காருக்கு முன்னால் இன்னொரு கார் சென்று கொண்டிருக்கிறது.திடீரென அந்தக் கார் திரும்ப முயற்சிக்க அஜித்குமாரின் கார் அதன் மீது இடிக்கிறது. இதனால் கிட்டத்தட்ட இரண்டு, மூன்று முறை அஜித்தின் கார் பல்டி அடிக்கிறது.
அந்த இடத்திற்கு உடனே பாதுகாப்பாளர்களும், ஆம்புலன்ஸும் விரைந்து செல்கிறது. காரிலிருந்து அஜித்குமார் நலமாகவே வெளியில் வருகிறார்.அவரை பாதுகாப்பாக அவர்கள் அழைத்து செல்கிறார்கள்.இந்த விபத்தில் நடிகர் அஜித்துக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1893493332804018227
Tags: வைரல் வீடியோ
