தமிழகத்தில் பரவும் சளி காய்ச்சல் இன்ஃபுளுயென்சா தடுப்பூசி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
தமிழகத்தில் பரவும் சளி காய்ச்சல் இன்ஃபுளுயென்சா தடுப்பூசி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
சளி காய்ச்சல் காரணமாக இன்ஃபுளுயென்சா தடுப்பூசி செலுத்துவது பற்றி வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியீட்டுள்ளது.
காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளை கண்காணித்தல், மருத்துவமனை நோயாளிகளின் விவரங்களை சேகரிக்க வேண்டும். மருத்துவமனைகளில் தேவையான படுக்கைகள் மற்றும் மருந்துகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்ஃபுளுயென்சா தடுப்பு மருந்துகளை கையிருப்பு வைத்திருக்க வேண்டும்.
இன்ஃபுளுயென்சா தடுப்பூசி செலுத்துவது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சளி காய்ச்சல் பாதிப்பு உள்ளது. அதனால் மாவட்ட சுகாதார அலுவலர்கள் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
இருமல், சளி உள்ள நபர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக கண்காணித்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
Tags: தமிழக செய்திகள்
