Breaking News

ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை திட்டம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

 50 வயதினைக் கடந்த ஆசிரியர்களுக்கு `மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ₹1,000/- செலவிலான` முழு உடல் பரிசோதனை  திட்டத்தை செயல்படுத்துதல் தொடர்பாக நெறிமுறைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!




அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.அதனை தொடர்ந்து நேற்றே தமிழக அரசு இதற்கான அரசாணையை  கடந்த ஆண்டு வெளியிட்டது

அதில்:-

பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை முதற்கட்டமாக மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

கோல்டு திட்டத்தின் கீழ் ஒரு ஆசிரியருக்கு ரூ.1000 வீதம் ரூ.3.56 கோடி மட்டும் தேசிய ஆசிரியர் நலநிதியிலிருந்து இச்செலவினத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்தின்படி, 50 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களையும், மூன்றாக பிரித்து, ஆண்டு ஒன்றிற்கு சுமார் 35600 ஆசிரியர்கள் வீதம், முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

ஒவ்வோர் ஆண்டும் இத்தொகையை தேசிய ஆசிரியர் நலநிதியிலிருந்து கேட்டுப் பெற்றுக் கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 01.03.2023 அன்று 50 வயதினை கடந்த ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழுஉடல் பரிசோதனை செய்வது தொடர்பான இத்திட்டச் சார்ந்த செய்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்.

வழிமுறைகள் வெளியீடு:-

ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்வதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. அவ்வாணையில், முதற்கட்டமாக 50 வயதிற்கு மேற்பட்ட அனைத்துவகை ஆசிரியர்களுக்கு மட்டும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், பள்ளிக் கல்வித்துறையில் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு (Package-1 Gold Scheme) திட்டத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள பின்வரும் பரிசோதனைகளை மேற்கொள்ள பார்வையில் காணும் அரசாணையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

1. Complete Haemogram

2. ESR Urine Analysis

3. Blood Sugar F & PP

4. Urea, Creatinine, Uric Acid

5. Lipid Profiles

6. Total Cholesterol (HDL&LDL) 7. Triglycerides, Total Cholesterol HDL ratio.

8. Liver Function Test

9. Serum Bilirubin(Total & direct)

10. AST, ALT, SAP, Total Protein And Albumin

11. Hbs/Ag

12. Blood Grouping & Typing

13. ECG

14. X-Ray Chest

15. USG Abdomen

16. Pap Smear

எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள 50 வயதினை கடந்தவர்களில் வயது மூப்பு அடிப்படையில் தற்போது 150 ஆசிரியர்களை இத்திட்டத்தின் கீழ் பயன் பெற தெரிவு செய்யப்பட வேண்டும். 50 வயதினை கடந்த ஆசிரியர்களிடமிருந்து இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தின் படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சார்ந்த பள்ளியின் தலைமையாசிரிர்கள் உரியபரிந்துரையுடன் 28.02.2025 க்குள் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு சமர்பிக்க வேண்டும்.



பெறப்பட்ட விண்ணப்பங்களை 07.03.2025 க்குள் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் பரிசிலினை செய்து, 150 ஆசிரியர்களை தெரிவு செய்தல் வேண்டும். மேலும், தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்கள் சார்ந்த விவரங்களை மாவட்ட அளவிலான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலருக்கு சமர்பித்து உடல் நல பரிசோதனைக்கான கால அட்டவணையினை தயாரித்து அதன் தகவல்களை சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் மற்றும் தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் தெரிவித்து ஆணை வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

இணைப்பில் உள்ள அட்டவணையின மாஜா UL வாரியாக 150 ஆசிரியர்களை தெரிவு செய்து (Package-1 Gold Scheme) திட்டத்தின் கீழ் பயன் பெற தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், இத்திட்டத்திற்கென இணைப்பில் உள்ள விவரப்படி, தலா ரூ.1.50,000/- ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்து 38 மாவட்டத்திற்கும் ரூ.57,00,000/- தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து அனுமறித்து ஆணை வழங்கப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback