வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு - அதிமுக எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு - அதிமுக எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அம்மன் அர்ஜுனன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.75 கோடி சொத்து குவித்ததாக கோவை அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்
கோவை மாநகர மாவட்ட அதிமுக செயலாளராக இருப்பவர் அம்மன் கே.அர்ச்சுனன். கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்டு வென்ற இவர் கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக உள்ளார்.
இந்நிலையில் இன்று காலை 6 மணி அளவில் கூடுதல் எஸ்பி திவ்யா தலைமையிலான கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் எம்எல்ஏ அம்மன் கே.அர்ர்ச்சுணன் வீட்டிற்கு வந்தனர். வெளியாட்கள் உள்ளே நுழையவும், வீட்டில் இருப்பவர்கள் வெளியே செல்லவும் தடை விதித்தனர். வீட்டிலிருந்து அம்மன் கே.அர்ச்சுனனிடம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அதன் அடிப்படையில் உங்களது வீட்டில் சோதனை நடத்த வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்
Tags: அரசியல் செய்திகள்
