வானில் நடக்கும் அரிய நிகழ்வு ஒரே நேர்கோட்டில் 7 கிரகங்கள் பிப் 28 ம் தேதி முதல் பார்க்கலாம் Planet Parade 2025
சூரிய குடும்பத்தில் பூமியை போலவே மேலும் பல கோள்களும், சிறுக்கோள்களும், விண்மீன்களும் சூரியனை ஒரு குறிப்பிட்ட பாதையில் சுற்றி வருகின்றன. ஒவ்வொரு கிரகமும் பூமியை விட நீளமான அல்லது குறைவான சுற்றுப்பாதையில் சூரியனை சுற்றி வருகையில் மிக அரிதாக அவ்வப்போது சில கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக் கொள்வதுண்டு.
அந்த வகையில் ஒரே நேர்கோட்டில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 7 கிரகங்கள் பிப்ரவரி 28ல் வானில் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் அறிய நிகழ்வு நடக்கவுள்ளது ,மேலும் இதுபோல் 2040-ல் தான் நிகழும்என நாசா தெரிவித்துள்ளது.
இந்த கிரக அணிவகுப்பு பிப்ரவரி 28 அன்று தொடங்கினாலும், இந்தியாவில் உள்ள பார்வையாளர்கள் மார்ச் 3 ஆம் தேதி முதல் தெளிவாக பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி உள்ளிட்ட கிரகங்களை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்றும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கிரகங்களை பைனாக்குலர் மற்றும் தொலைநோக்கி உதவியுடன் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பிப்ரவரி 28 அன்று வானிலை தெளிவாக இருந்தால், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் தவிர அனைத்து கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பதை வெறும் கண்களால் பார்க்க முடியும்.ஏன் சிறப்பு வாய்ந்தது?நமது சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. அனைத்து கோள்களும் சூரியனின் ஒரு பக்கத்தில் ஒரு நேர்கோட்டில் சீரமைக்கப்படும்போது, அனைத்து கோள்களும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பது போல் நமக்குத் தோன்றும், இது கிரக அணிவகுப்பு என்று அழைக்கப்படுகிறது.
Tags: வெளிநாட்டு செய்திகள்
