Breaking News

பெற்றோர், சகோதரன் , காதலி உட்பட 5 பேரை சுத்தியலால் அடித்து கொலை செய்து காவல்நிலையத்தில் சரண் அடைந்த இளைஞர்!

அட்மின் மீடியா
0

பெற்றோர், சகோதரன் , காதலி உட்பட 5 பேரை சுத்தியலால் அடித்து கொலை செய்து காவல்நிலையத்தில் சரண் அடைந்த இளைஞர்!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் பேருமலை பகுதியில் வசிக்கும் 23 வயதான அபான் நேற்று இரவு வெஞ்ஞாரமூடு காவல் நிலையத்தில்  தனது அம்மா, சகோதரன், காதலி உள்பட 6 பேரை கொலை செய்துவிட்டதாக கூறி சரண் அடைந்தார்.

விசாரணையில் யானை பேருமலை பகுதியை சேர்ந்தவர் ரஹிம். இவரது மனைவி ஷெமி. இந்த தம்பதியின் மூத்த மகன் அபான் (வயது 23), இளைய மகன் அப்சான் (வயது 13). ரஹிம் சவூதியில் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அபான் அதே பகுதியைச் சேர்ந்த பர்சானா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை இவர் தன்னுடைய வீட்டில் வைத்து தாய் ஷெமி, காதலி பர்சானா மற்றும் தம்பி அப்சான் ஆகியோரை சுத்தியலால் சரமாரியாக அடித்துள்ளார். 

இதன் பின்னர் அருகிலுள்ள பாங்கோடு என்ற இடத்தில் வசிக்கும் தன்னுடைய பாட்டி சல்மா பீவியை (88) சுத்தியலால் தாக்கியுள்ளார். இதன்பிறகு அருகிலுள்ள சுள்ளால் பகுதிக்கு வந்து தன்னுடைய பெரியப்பா லத்தீப் (63) மற்றும் அவரது மனைவி ஷாகினா (53) ஆகியோரையும் சுத்தியல் மற்றும் கத்தியால் தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தில் அஃபானின் தாய் ஷெமி தவிர மற்ற 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஷெமி ஆபத்தான நிலையில் வெஞ்ஞாரமூட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அபான் தகவலின்படி சம்பவ இடங்களுக்கு சென்ற போலீசார், ஐந்து பேரின் உடல்களை மீட்டனர். உயிருக்கு போராடிய தாய் ஷெமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 

இதற்கிடையே தான் எலி விஷம் சாப்பிட்டதாக கொலையாளி அஃபான் போலீசிடம் கூறினார். இதையடுத்து அவர் உடனடியாக சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர்.  5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback