5 ம் கட்டமாக மூன்று பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ் முழு விவரம்
5 ம் கட்டமாக மூன்று பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ் முழு விவரம்
ஒப்பந்தம் மீறிய இஸ்ரேல் - ஹமாஸ் குற்றச்சாட்டு:-
ஜனவரி 19 ஆம் திகதி போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா பகுதியில் இஸ்ரேல் போர் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய் சேர வேண்டிய மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் ராணுவம் தடுப்பதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வாரங்களாக, ஹமாஸ் குழுவின் தலைமை, இஸ்ரேல்படைகளின் வீதி மீறல்களையும், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறியதையும் கண்காணித்து வருகிறது.
வடக்கு காஸாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அங்கு செல்வதை தாமதப்படுத்துதல், காஸா முனையின் பல்வேறு பகுதிகளில் ஷெல் குண்டுகள் குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு மூலம் தாக்குதல் நடத்துவது, அந்த பகுதியில் வழங்கப்படும் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கத் தவறுதல் ஆகியவை இந்த வீதி மீறல்களுள் அடங்கும்.'' என ஹமாஸ் தெரிவித்துள்ளது
ஹமாஸ் அறிவிப்பு:-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதை அடுத்து, அடுத்தக்கட்ட பணயக்கைதிகள் விடுவிப்பை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்
அமெரிக்கா எச்சரிக்கை:-
இந்நிலையில், அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் நிருபர்களிடம் பேசிய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்,
காசாவில் பிடித்து வைக்கப்பட்டு உள்ள பணய கைதிகள் அனைவரும் வருகிற சனிக்கிழமை 12 மணிக்குள் விடுவிக்கப்படவில்லை எனில், போர்நிறுத்தத்தை விலக்கிக்கொள்ள நான் உத்தரவிடுவேன். அதன் பின்னர் எல்லாவிதமான மோசமான விளைவுகளும் ஏற்படும்.
இவ்வாறு காலக்கெடு விதித்திருப்பது குறித்து இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிடம் பேச இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மோசமான விளைவுகள் என்ன என்பதை திரு டிரம்ப் விரிவாகச் சொல்லாவிட்டாலும், அவை என்னவென்று ஹமாஸுக்குத் தெரியும் என்றார்.
விடுவிப்பு:-
ஹமாஸ் மூன்று பணயக்கைதிகளை இன்று(பிப்.15) செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்தது. அவர்கள் இஸ்ரேலுக்கு திரும்பினர். இதற்கு ஈடாக இஸ்ரேல் 369 பாலத்தீன கைதிகளை விடுதலை செய்கிறது. சிலர் மேற்குக் கரையை அடைந்தனர். பெரும்பான்மையானவர்கள் காஸாவுக்கு வருகின்றனர்.
Tags: வெளிநாட்டு செய்திகள்
