Breaking News

சிறு வணிகர்கள் 5 லட்சம் வரை கடன்பெற கிரெடிட் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் msme credit card 5 lakh

அட்மின் மீடியா
0

2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் வாக்குறுதியளிக்கப்பட்டபடி, ஏப்ரல் முதல் குறு தொழில்முனைவோர் ரூ.5 லட்சம் வரம்பைக் கொண்ட கிரெடிட் கார்டுகளைப் பெற உள்ளனர். 

இந்தத் திட்டத்தில் பயனடைய சிறு வணிகர்கள் பதிவு செய்து கடன் அட்டையைப் பெற வேண்டும். இந்தச் சூழலில், ரூ.5 லட்சம் வரம்புடன் இந்தக் கடன் அட்டையைப் பெறுவதற்கான தகுதி என்ன யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள்.

சிறிய கடைகளை வைத்து நடத்துபவர்களும், சிறிய அளவில் ஆட்களை வைத்து கடை நடத்தி வருபவர்களும் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். தொழில் நிறுவனங்களில் உரிமையாளர்கள் கூட இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.

ஆண்டுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் ரூபாய்க்குள் வருமானம் ஈட்டும் சிறு குறு வியாபாரிகள் இந்த மைக்ரோ கிரெடிட் கார்டு திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ளலாம்.

இந்த கிரிடிட் அட்டை ஒரு வருட செல்லுபடியாகும் காலத்தைக் கொண்டிருக்கும். 

இந்த கிரெடிட் கார்டைப் பெற, நாடு முழுவதும் உள்ள சிறு வணிகர்கள் உதயம் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். பின்னர், அவர்கள் MSME கிரெடிட் கார்டைப் பெறலாம்.

மத்திய அரசின் உதயம் (Udyam portal) தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.உதயம் தளத்தின் msme.gov.in. என்ற அதிகாரபூர்வ பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

அதில் Quick Links என்பதை கிளிக் செய்ய வேண்டும்Udyam Registration என்பதை கொடுத்து அதில் கேட்கப்படும் தரவுகளை உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்த 5 லட்சம் ரூபாய் கிரெடிட் காடு திட்டம் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடங்கு போவதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback