ரமலான் நோன்பு காரணமாக இஸ்லாமிய அரசு ஊழியர்கள் 4 மணிக்கே வீட்டிற்க்கு செல்ல தெலுங்கானா அரசு அனுமதி Telangana Muslim employees Ramzan
ரமலான் நோன்பு காரணமாக இஸ்லாமிய அரசு ஊழியர்கள் 4 மணிக்கே வீட்டிற்க்கு செல்ல தெலுங்கானா அரசு அனுமதி Telangana to allow Muslim employees to leave offices early during Ramzan
ரமலான் மாதத்தை ஒட்டி அரசு துறைகளில் பணிபுரியும் அனைத்து முஸ்லிம்களுக்கும் அலுவலக நேரம் குறைக்கப்படுவதாக தெலுங்கானா மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
ரமலான் பண்டிகை இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் மார்ச் 2 முதல் 31-ஆம் தேதி இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து தொழுகை செய்வார்கள்.
இந்த நிலையில் தெலுங்கானா அரசு அலுவலகங்களில் பணிபுரியும் இஸ்லாமிய பணியாளர்கள் மார்ச் 2 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை மாலை 4 மணிக்கு வீட்டுக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒப்பந்தம், அவுட்சோர்சிங், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கும் அனைத்து அரசுத்துறைகளிலும் பணிபுரியும் இஸ்லாமிய ஊழியர்களுக்கு பொருந்தும். ரமலான் மாதத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் இப்தார் விருந்துக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஊழியர்களின் வழிபாடு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டால் இஸ்லாமிய ஊழியர்கள் பணியை தொடர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Telangana Government has issued an order permitting all Government Muslim Employees/Teachers/Contract /Out-sourcing/Boards/ Corporations & Public Sector Employees working in the State to leave their Offices/Schools at 4.00 pm during the Month of Ramzan from 2nd March to 31st March (both days inclusive) to offer necessary prayers, except when their presence is required due to exigencies of services during the above period.
Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி

