புதுச்சேரியில் பயங்கரம் 3 வாலிபர்கள் வெட்டி படுகொலை முழு விவரம்
புதுச்சேரியில் பயங்கரம் 3 வாலிபர்கள் வெட்டி படுகொலை முழு விவரம்
புதுச்சேரியில் பிரபல தாதாவின் மகன் உட்பட மூன்று வாலிபர்களை, நகரின் மையப்பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் வைத்து மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
புதுச்சேரி ரெயின்போ நகரில் பிரபல ரவுடி தெஸ்தானின் மகன் ரிஷி, தேவா, ஆதி ஆகிய 3 வாலிபர்கள் வெட்டி படுகொலை
புதுச்சேரி ரெயின்போ நகரில் இளைஞர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு ரிஷி மற்றும் தேவா ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு இருந்தை கண்டனர் மேலும் படுகாயங்களுடன் கிடந்த ஜே.ஜே.நகரைச் சேர்ந்த ஆதி என்பவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார்.
கொலை சம்பவம் நடந்த இடத்தில் டி.ஐ.ஜி சத்தியசுந்தரம், எஸ்.எஸ்.பி நாரா சைதன்யா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். பட்டப்பகலில் 3 இளைஞர்கள் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
