Breaking News

திருப்பூரில் ஒடிசா பெண்ணுக்கு கணவன் கண்முன்னே கூட்டு பாலியல் வன்கொடுமை பீகாரை சேர்ந்த 3 பேர் கைது நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

திருப்பூரில் கணவன்,குழந்தை கண் முன்னே பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை பீகாரை சேர்ந்த 3 பேர் கைது நடந்தது என்ன முழு விவரம்



திருப்பூரில் கணவர் மற்றும் குழந்தை கண் எதிரில் கத்தியை காட்டி மிரட்டி ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பீகாரைச் சேர்ந்த மூவர் கைது!

வேலைத்தேடி திருப்பூர் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த தம்பதியிடம் அங்கு வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது நதிம்(வயது 24), முகமது டேனிஸ்(25) மற்றும் முகமது முர்சித்(19) ஆகியோர் பனியன் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சுமி நகர் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து கத்தியைக் காட்டி கணவரை மிரட்டி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை அடுத்து நதீம், டானிஷ், முர்சித் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரி சேர்ந்த நதீம், டேனிஷ், முர்ஷித் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்கள் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல், தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback