Breaking News

தாம்பரம் பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கபட்ட முதியவர் அடித்து கொலை - 2 பேர் கைது

அட்மின் மீடியா
0

தாம்பரம் பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கபட்ட முதியவர் அடித்து கொலை - 2 பேர் கைது

தாம்பரம் அருகே மனநலம் பாதிக்கபட்ட முதியவரை காவலர்கள் கண்முன்னே வழக்கறிஞர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



சென்னை தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையில் நேற்று இரவு மனநலம் பாதிக்கபட்ட முதியவர் ஒருவர் சாலையின் நடுவே நிற்பதாக தாம்பரம் போலீசாருக்கு சிலர் தகவல் அளித்துள்ளனர்,இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் முதியவரை மீட்டு, அவரின் மகனை செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்ததில் அயனாவரம் பகுதியை சேர்ந்த ரங்கநாதன் (60) என்பதும் கடந்த மூன்று வருட காலமாக மனநலம் பாதிக்கபட்டவர் சிகிச்சையில் இருந்து வந்ததாகவும், கடந்த 19 ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிதையும் தெரிவித்தார்,

அப்போது ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கதிஞர் மணிகண்டன் (31) மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் வினோத் (28) இருவரும் திண்டிவனம் சென்று கொண்டிருந்தபோது தாம்பரத்தில் தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக தங்களது காரை நிறுத்தியுள்ளனர். 

அப்போது எதிர்பாராத விதமாக மனநலம் பாதிக்கபட்ட ரங்கநாதன் அவர்களின் கார் கதவை திறந்து மூடியதால் ஆத்திரமடைந்த வழக்கறிஞரும் சட்ட்கல்லூரி மாணவரும் மனநலம் பாதிக்கப்பட்ட நபரிடம் கோபமடைந்து அவரை தாக்கியுள்ளனர். 

அப்பொழுது அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர், போலீசார் முன்னாடியே எதற்கு அடிக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.ஆனாலும் ஆத்திரம் அடங்காத  தன்னுடைய அவர்கள்  கதவை எப்படி திறந்து மூடலாம் என்று கேட்டு மீண்டும் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெரியவரை அடித்து கீழே தள்ளியபோது அப்பகுதியில் இருந்த சிமெண்ட் திட்டு மீது தலை வேகமாக மோதி கீழே விழுந்த பெரியவர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த தாம்பரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.காவலர்கள் கண்முன்னே மனநலம் பாதிக்கபட்டவரை வழக்கறிஞர்கள் தாக்கி கொலை செய்த சம்பவம் தாம்பரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback