Breaking News

27 ஆண்டுகளுக்குப் பின் டெல்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக ஆம் ஆத்மி, காங்கிரஸ் தோல்வி

அட்மின் மீடியா
0

27 ஆண்டுகளுக்குப் பின் டெல்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக ஆம் ஆத்மி, காங்கிரஸ் தோல்வி 


டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற இடங்களுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்து முடிந்துள்ளது இதில் 36 இடங்களில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.  இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மியும்  காங்கிரஸ் கட்சியும் தனித்து 70 இடங்களிலும் போட்டியிடுகிறது. பாஜக 68 இடங்களிளும் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 1 இடத்திலும், லோக் ஜனசக்தி கட்சி 1 இடத்திலும் போட்டியிட்டது

டெல்லியில் அதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சிநடைபெறுகிறது. 70 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 70 தொகுதிகளில் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆட்சி அமைக்க 36 இடங்களில் வெற்றி பெற வேண்டும். 

டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி பாஜக 46 இடங்களிலும், ஆம் ஆத்மி 24 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 

புதுடில்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியை தழுவியுள்ளார். 

கெஜ்ரிவால் தோல்வி:-

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில், புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியடைந்துள்ளார்

கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

முதலமைச்சர் அதிஷி வெற்றி!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில், கல்காஜியில் போட்டியிட்ட முதலமைச்சர் அதிஷி வெற்றி பெற்றுள்ளார்.

பாஜக வேட்பாளர் ரமேஸ் பிதுரியை 989 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார் அதிஷி!

அதேபோல் ஜங்புராவில் மணீஸ் சிசோடியா, ஷகுர் பஸ்தியில் சத்யேந்திர் ஆகிய ஆம் ஆத்மியின் பிற முக்கிய தலைவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்

டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை 

பாஜக   48   இடங்களில் வெற்றி

ஆம் ஆத்மி  22  இடங்களில் வெற்றி

தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/ResultAcGenFeb2025/index.htm

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக முன்னிலை..வாக்கு எண்ணிக்கை முழு விவரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/02/erode-by-election-2025.html

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback