Breaking News

தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு துவக்க விழா நேரலையில் பார்க்க TVK 2nd Year Inauguration Ceremony Live Watch

அட்மின் மீடியா
0

தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு துவக்க விழா நேரலையில் பார்க்க TVK 2nd Year Inauguration Ceremony Live Watch

த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் முக்கிய அறிவிப்புகளை விஜய் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்றைய விழாவில் தமிழக வெற்றிக்கழகத்துடன் தேர்தல் வியூக பணியில் கைகோர்த்துள்ள பிரசாந்த் கிஷோரும் இதில் பங்கேற்க இருக்கிறார். 

தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரத்தில் இன்று (26-02-2025) இன்று  காலை தொடங்குகின்றது 

விழுப்புரத்தில் நடந்த கட்சியின் முதல் மாநாட்டுக்கு பிறகு விஜய் பங்கேற்கும் கூட்டம் என்பதால் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் மாமல்லபுரத்தில் இன்று நடைபெறும் ஆண்டு விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகத்துடன் தேர்தல் வியூக பணியில் கைகோர்த்துள்ள பிரசாந்த் கிஷோரும் பங்கேற்க இருக்கிறார். இதுதவிர தமிழக வெற்றிக்கழத்தின் அரசியல் ஆலோசனை குழுவில் உள்ள ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள்.அந்த வகையில் இந்த கூட்டம் முழுக்க, முழுக்க 2026 தேர்தல் வியூகத்தை மேற்கொள்வதற்கான கூட்டமாகவே அமைய இருக்கிறது. 

தமிழக வெற்றிக்கழக 2-ம் ஆண்டு தொடக்க விழா பணிகளை மேற்கொள்ள 18 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு அக்கட்சி தலைமை வெளியிட்டது. இந்த குழுவில், 

சி.சூரியநாராயணன் (செங்கல்பட்டு), 

மோகன் ராஜா (செங்கல்பட்டு), 

எம்.எஸ்.பாலாஜி (செங்கல்பட்டு), 

வி.நரேந்திரன் (செங்கல்பட்டு), 

தீனா (திருப்போரூர்), 

தியாகு (திருப்போரூர்), 

ராஜேஷ் (திருப்போரூர்), 

ரமேஷ் (திருப்போரூர்), 

சுசி கணேஷ் (திருப்போரூர்), 

கே.தேவா (திருப்போரூர்), 

எஸ்.விஸ்வநாதன் (திருப்போரூர்), 

ஹேமா (திருப்போரூர்), 

விஜயதேவி (திருப்போரூர்), 

புஷ்ப ராஜ் (திருப்போரூர்), 

பவானி (திருப்போரூர்), 

கவுதம் (திருப்போரூர்), 

ஜான் ரமேஷ் (மதுராந்தகம்), 

கண்ணன் (திருப்போரூர்) 

ஆகிய 18 பேர் இடம்பெற்று உள்ளனர்.

நேரலையில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.youtube.com/watch?v=XtP1elFACDY

நேரலையில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.youtube.com/watch?v=oG0DsR5DeRs

நேரலையில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.youtube.com/watch?v=C9Ox2uR1gN4

நேரலையில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.youtube.com/watch?v=jZbx3Zq-YhE


Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback