ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திருமண திருத்த சட்டம் 18 வயது ஆன பெண்கள் பாதுகாவலர் சம்மதம் இன்றி திருமணம் செய்து கொள்ளலாம் முழு விவரம் இதோ UAE amends Marriage Law tamil
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் புதிய தனிப்பட்ட அந்தஸ்து சட்டத்தில் பெரிய மாற்றங்கள், ஏப்ரல் 2025 முதல், ஐக்கிய அரபு எமிரேட் பெண்கள் பாதுகாவலரின் ஒப்புதல் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாம். முன்னதாக, ஒரு எமிராட்டி பெண் திருமணம் செய்ய தனது பாதுகாவலரின் ஒப்புதல் தேவைப்பட்டது.அவளுடைய தந்தை இறந்துவிட்டால், அவளுடைய மூத்த சகோதரனைப் போலவே அடுத்த ஆண் பாதுகாவலர் உடனிருக்க வேண்டும்.
UAE amends Marriage Law tamil ஐக்கிய அரபு அமீரகம் தனது திருமணச் சட்டங்களில் பெரிய திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது இது ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றது.
அதில் மிகவும் முக்கியமாக சம்மதம், சட்டப்பூர்வ வயது மற்றும் விவாகரத்து நடைமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. பெண்கள் தங்கள் பாதுகாவலர் எதிர்த்தாலும், அவர்கள் தேர்ந்தெடுத்த துணையை திருமணம் செய்து கொள்ளும் உரிமையை வழங்குகிறது. மேலும் திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது 18 ஆகவே உள்ளது.
திருமண விஷயத்தில் பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ அதிகாரம் செலுத்தக் கூடாது. 18 வயதை பூர்த்தி செய்துவிட்டால் பெண்கள் விரும்பும் யாரையும் திருமணம் செய்து கொள்ளலாம். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாலும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப திருமணம் செய்து கொள்வதில் தடை ஏதும் இல்லை. இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுகி பெண்கள் நீதி பெறலாம்.
மணமகனுக்கும் மணமகளுக்கும் இடையே 30 வயதுக்கு மேல் வயது வித்தியாசம் இருந்தால், திருமணத்தைத் தொடர்வதற்கு முன் நீதிமன்ற ஒப்புதல் கட்டாயமாகும்.
நிச்சயதார்த்தம் என்பது பெண்ணின் முழு சம்மதத்துடன் தான் நடைபெற வேண்டும். திருமணத்திற்கான உறுதி அளிக்கப்பட்ட பின்னரே நிச்சயதார்த்தம் செய்ய வேண்டும்.
அதேசமயம் நிச்சயதார்த்தம் செய்துவிட்டாலே திருமணம் ஆகிவிட்டது என்று கருதக் கூடாது. பரிசுப் பொருட்கள் தர வேண்டும் என்ற கட்டுப்பாட்டின் கீழ் திருமணம் உறுதி செய்யப்பட்டால் அந்த பரிசை திருப்பி தந்துவிட வேண்டும்.இது 25 ஆயிரம் திர்ஹாம்களுக்கு மேல் மதிப்பு கொண்ட பரிசு பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும்.
மேலும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தால், அந்த குழந்தைகளை ஒருமித்த சம்மதத்தின் பேரில் புதிய வாழ்க்கையில் வைத்து கொள்ள உரிமை உண்டு.இந்த குழந்தைகளின் பொருளாதார விஷயங்களை பெண்ணின் கணவர் தான் பார்த்து கொள்ள வேண்டும்.
இந்த அனைத்து மாற்றங்களும் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்
