Breaking News

கும்பமேளா செல்ல வந்தவர்களால் டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழப்பு வீடியோ இணைப்பு New Delhi Railway Station Stampede died

அட்மின் மீடியா
0

கும்பமேளா செல்ல வந்தவர்களால் டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழப்பு வீடியோ இணைப்பு New Delhi Railway Station Stampede died

கும்பமேளாவுக்கு செல்ல வந்தவர்கள், அங்கிருந்து டெல்லி திரும்பியவர்கள் என ரயில் நிலையத்தில் பெரும் கூட்டம் கூடியிருந்தது நடைமேடை 13, 14,15-ல் நின்றிருந்த உ.பி. செல்லும் ரயில்களில் ஏராளமான பயணிகள் முண்டியடித்து ஏறியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கும்பமேளா செல்வதற்காக டில்லி ரயில் நிலையத்தில் நேற்று ஒரே நேரத்தில் இரவு 9:15 மணிக்கு அதிக அளவில் பயணிகள் திரண்டனர். இதையடுத்து 13 மற்றும் 14 பிளாட்பார்ம்களில் கூட்ட நெரிசல் அதிகமானது. இதில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 18 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டெல்லியில் இருந்து பிரயாக்ராஜ் செல்லும் இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சம்பவம் நடந்த இடத்திற்கு தேரிய பேரிடர் குழுவினர் விரைந்துள்ளனர். மீட்புப்பணி நடந்து வருகிறது. நெரிசலில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

விபத்து குறித்து உயர் மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். 

டில்லி ரயில்நிலைய நெரிசல் காரணமாக 18 பேர் பலியானது குறித்து பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுவதாக அவர் மேலும் தெரிவித்தார்

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1890947015720202625

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback