Breaking News

சமூகவலைதளம் மூலம் பழக்கம் நம்பி சென்ற 17 வயது சிறுமி - கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 7 கல்லூரி மாணவர்கள் கைது முழு விவரம்!

அட்மின் மீடியா
0

Snap chat மூலம் பழக்கம்  நம்பி சென்ற 17 வயது சிறுமி - கூட்டுப் பாலியல் பலாத்காரம்  செய்த 7 கல்லூரி மாணவர்கள் கைது முழு விவரம்! 



கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் சமூக வலைத்தளம் மூலம் சில இளைஞர்களுடன் பழக்கம் கொண்டிருந்தார். அந்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறியுள்ளது. 

கோவையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் குனியமுத்தூர் பகுதியில் அறை எடுத்து தங்கி படித்து வருவது வருகின்றனர். 

இந்நிலையில் Snapchat சமூக வலைதளத்தில் கணக்கு வைத்திருக்கும் 17 வயது சிறுமியை தொடர்பு கொண்ட இளைஞர்கள் அவரிடம் நட்பாக பழகி உள்ளனர்.  இந்நிலையில் சிலநாட்களுக்கு முன்பு அந்த சிறுமியை  தங்கள் அறைக்கு வரவழைத்துள்ளனர். பின்னர் 7 பேரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறுமி வீடு திரும்ப தாமதமானதால், சிறுமியின் பாட்டி உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் சிறுமி கல்லூரி மாணவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தெரியவந்தது. இதையடுத்து உக்கடம் காவல்துறையினர் . ஜெபின் (20),ரஷித் (19), அபினேஸ்வரன் (19), தீபக் (20), யாதவ் ராஜ் (20), முத்து நாகராஜ் (20), நித்திஷ் (19) ஆகிய 7 கல்லூரி மாணவர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback