Breaking News

இயக்குனர் ஷங்கருக்கு சொந்தமான ரூ.10.11 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0

இயக்குனர் ஷங்கருக்கு சொந்தமான ரூ.10.11 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை

தனது கதையைத் திருடி இயக்குநர் ஷங்கர் ‘எந்திரன்’ திரைப்படத்தை எடுத்ததாக நக்கீரன் முதன்மைத் துணை ஆசிரியரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கில்இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.



நக்கீரன் முதன்மைத் துணை ஆசிரியரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் என்பவர் எழுதிய ‘ஜுகிபா’ கதை, ‘திக்திக் தீபிகா’ என்ற பெயரில் கடந்த 2007-ம் ஆண்டு நாவலாக வெளியானது. 

இந்நிலையில் 2010-ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ படம் வெளியானது. அதைப் பார்த்த எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், ‘எந்திரன்’ திரைப்படத்தின் கதை தன்னுடைய ‘ஜுகிபா’ கதை எனக்கூறி, காப்புரிமை சட்டத்தின்படி எழும்பூர் கீழமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

இந்நிலையில் தொடர்ந்து நடைபெற்று வரும் எந்திரன் திரைப்பட கதை காப்புரிமை தொடர்பான வழக்கில் இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான 10.11 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-

அமலாக்க இயக்குனரகம் (ED), சென்னை மண்டல அலுவலகம், 17/02/2025 அன்று பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA), 2002 விதிகளின் கீழ், எஸ்.சங்கர் பெயரில் பதிவு செய்யப்பட்ட 3 அசையாச் சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.10.11 கோடி (தோராயமாக) தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

19 மே 2011 (சிசி எண். 2067/2011) அன்று சென்னை எழும்பூர் 13வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் எஸ்.சங்கருக்கு எதிராக ஆரூர் தமிழ்நாடன் தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில் ED விசாரணையைத் தொடங்கியது. எஸ்.சங்கர் இயக்கிய எந்திரன் (ரோபோ) திரைப்படத்தின் கதைக்களம், ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ஜிகுபா என்ற கதையிலிருந்து நகலெடுக்கப்பட்டது என்றும், இதன் மூலம் காப்புரிமைச் சட்டம், 1957 மற்றும் ஐபிசி, 1860 ஆகியவற்றின் கீழ் எஸ்.சங்கர் பொறுப்பேற்கிறார் என்றும் புகார் கூறப்பட்டுள்ளது.

ED விசாரணையில் எஸ்.சங்கர் கணிசமான சம்பளமாக ரூ. கதை உருவாக்கம், திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் உட்பட எந்திரனுக்கு அவர் அளித்த பன்முகப் பங்களிப்புகளுக்காக 11.5 கோடி. மேலும், ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (FTII) இன் ஒரு சுயாதீன அறிக்கை ஜிகுபா கதைக்கும் எந்திரன் திரைப்படத்திற்கும் இடையே உள்ள குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளை அடையாளம் கண்டுள்ளது. கதை அமைப்பு, பாத்திர வளர்ச்சி மற்றும் கருப்பொருள் கூறுகளை ஆய்வு செய்த இந்த அறிக்கை, ஷங்கர் மீதான திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு குறிப்பிடத்தக்க ஆதரவை அளிக்கிறது. ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'எந்திரன்' (ரோபோ) திரைப்படம் ரூ. உலகம் முழுவதும் 290 கோடி வசூல் செய்து, அந்த நேரத்தில் எல்லா நேரத்திலும் வசூல் சாதனை படைத்தது.

கணிசமான ஆதாரங்கள் மற்றும் கையில் உள்ள பதிவுகளின் அடிப்படையில், S. சங்கர் பதிப்புரிமைச் சட்டம், 1957-ன் பிரிவு 63-ஐ மீறியுள்ளார் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது - தற்போது PMLA, 2002-ன் கீழ் திட்டமிடப்பட்ட குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது


அமைப்பு, கதாப்பாத்திரம், கருப்பொருள் கூறுகளை, ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (ஃஎப்டிஐஐ) ஆய்வு செய்தது.ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ‘ஜுகிபா’ கதைக்கும் ‘எந்திரன்’ திரைப்படத்தின் கதைக்கும் இருக்கும் ஒற்றுமையை அறிக்கையாக சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் இயக்குநர் ஷங்கர் மீதான கதை திருட்டு குற்றச்சாட்டு நிரூபணமாகி உள்ளது. அந்தவகையில், காப்புரிமை சட்டத்தை இயக்குநர் ஷங்கர் மீறியுள்ளார். இது சட்டவிரோத பணப்பரிமாற்றம் 2022 சட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.எனவே, சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடுப்புச் சட்டத்தின் கீழ் இயக்குநர் ஷங்கரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரூ.10.11 கோடி மதிப்புள்ள 3 அசையா சொத்துகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback