Breaking News

தமிழ்நாடு முழுவதும் இன்று 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு - மருந்துகள் விலை எவ்வளவு தெரியுமா

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு முழுவதும் இன்று 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு - மருந்துகள் விலை எவ்வளவு தெரியுமா


பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் முதல்வர் மருந்தகங்கள் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். 

மேலும் முதல்வர் மருந்தகம் தொடங்க தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்குப் பயிற்சி அளித்து முதல் தவணை மானியத்தொகை 1.50 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டது. இறுதிக்கட்ட மானியமாக ரூ.1.50 லட்சம் மதிப்புக்கு மருந்துகளாக வழங்கப்பட்டது. மேலும், தொழில் முனைவோருக்கு முதல்வர் மருந்தகம் அமைக்க கூடுதல் நிதி தேவைப்பட்டால், கூட்டுறவு வங்கிகள், டாபெட்கோ, தாட்கோ, டாம்கோ மூலம் கடன் பெறவும் வழிவகை செய்யப்பட்டது

முதல்வர் மருந்தகத்திற்குத் தேவையான ஜெனரிக் மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக் கல்ஸ் மற்றும் நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மருந்தகம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவரும், ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர் எழிலன், 

முதல்வர் மருந்தகம் கடைகள் திறக்கப்படுவதால், அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்துகளோ, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் வழங்கப்படும் மருந்துகளோ நிறுத்தப்படாது. அவை தொடரும்.மேலும் அவர், ஒப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், தனியார் மருந்தகங்களில் 70- ரூபாய்க்கு கிடைக்கும் ஒரு மாத்திரை முதல்வர் மருந்தகத்தில் 11 ரூபாய்க்கு கிடைக்குமாம். 

மேலும், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு தனியாரில் மருந்து வாங்க மாதம் ரூ.3,000 செலவாகும். முதல்வர் மருந்தகத்தில் ரூ.1000 மட்டுமே ஆகும் 

தோராயமாக 50 – 75% அளவுக்கு மருந்துகள் செலவு குறையும்.இதன் மூலம், மாத மாதம் ரெகுலராக மருந்து மாத்திரைகளுக்கு செலவு செய்யும் நடுத்தர மக்களின் மருந்து செலவில் இனி இந்த மருந்தகத்தில் 75 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு 

சென்னை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு. B.Pharm, D.Pharm சான்று பெற்றவர்கள் http://mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.adminmedia.in/2025/01/blog-post_227.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback